பாடசாலை மாணவர்கள் முகக் கவசம் அணிவது தொடர்பில் வெளியான தகவல்..!

0

பாடசாலை மாணவர்கள் வகுப்பறைக்குள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார் .

சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையில் அதனை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


பாடசாலைக்கு வரும் போதும் , வெளியேறும் போதும் முகக் கவசம் அணிவது சிக்கல் அல்ல என சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார் .

மாணவர்கள் 6 மணித்தியாலங்கள் பாடசாலை நேரத்திற்குள் தினசரி முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படும் என கூடும்.


எனவே பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வந்த பின்னர் தங்கள் முகக் கவசத்தை அகற்றி வேறு ஒரு பாதுகாப்பான துணிக்குள் வைக்க வேண்டும்.

பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் முக் கவசம் அணிவது கட்டாயமானதா? என்பது தொடர்பில் வினவிய போதே சுகாதார பணிப்பாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.