கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு 15,000 ரூபாய் கொடுப்பனவு; கல்வி அமைச்சின் அறிவிப்பு..!

0

கோவிட் – 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது, தேசிய கல்வியற் கல்லூரிகளின் மாணவர்களுக்கு வீட்டிலேயே செலவழித்த காலத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.


அதன்படி, கல்வி டிப்ளோமாக்களை நிறைவு செய்யவேண்டிய முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 15ஆம் திகதி வரை மாதாந்திர கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.


கோரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கல்லூரி மூடப்பட்ட மூன்று மாதங்களில் 16 ஆயிரத்து 200 மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்க 242 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.