மூன்று மாத காலமாக மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் திறப்பு..!

0

கொரோனா காரணமாக மூன்று மாத காலமாக மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


அதற்கமைய, உயர்தர வகுப்பு அதாவது 13 ஆம் தரம், 11 ஆம் தரம் மற்றும் 5 ஆம் தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் அடுத்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும்.


சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி கல்வி நடவடிக்களை திங்கட்கிழமை முதல் ஆரம்பிப்பதற்கான திட்டமிடல்கள் இவ்வாரம் முழுவதும் செயற்படுத்தப்பட்டன.


அத்துடன் சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறைகளை ஒழுங்குப்படுத்தல் கட்டாயமாக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.