கொரோனா எதிரொலி; கொழும்பு ஜிந்துப்பிட்டி வீதி முடக்கப்பட்டது..!

0

கப்பலில் பணிபுரிந்த நிலையில் இந்தியாவில் இருந்து வந்த மாலுமி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொழும்பு ,ஜிந்துப்பிட்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.


கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இவர் எந்தவித தொற்றும் கண்டறியப்படாத நிலையில் சுயதனிமைப்படுத்தலில் இருந்தார் எனவும் அந்த காலப்பகுதியில் செய்த மற்றுமொரு பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.


இது சமூக பரவல் அல்லவென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஆனாலும் அந்த பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் பழகிய மேலும் சிலரை கண்டறிய சுகாதார பாதுகாப்பு தரப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.