டிக்டொக் உட்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை..!

0

டிக்டொக் , யூசி ப்ரௌசர் உட்பட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏற்கெனவே சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில் டிக்டொக், ஷெயார் இட், யூசி பிரௌசர், ஹலோ எப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.