டாக்காவில் படகு கவிழ்ந்து விபத்து; 23 பேர் பலி..!

0

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு டாக்காவில் புரிகங்கா ஆற்றில் படகு கவிழ்ந்தபோது படகில் சுமார் 50 பயணிகள் இருந்ததாக தீயணைப்பு சேவை அதிகாரி தெரிவித்துள்ளார்.



சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 6 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளும் உள்ளடங்குதாகவும் சிலர் பாதுகாப்பாக கரைக்கு நீந்தி வந்தபோதும் பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பரந்த உள்நாட்டு நீர் வழிகளைக் கொண்ட ஒரு தாழ்வான நாடான பங்களாதேஷில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான மக்கள் படகு விபத்துக்களில் உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.