யார் இந்த விமலேஸ்வரி? சுமந்திரன் 21 கோடிகள் சுருட்டியது உண்மையா?

0

இன்று தமிழர் அரசியலில் பேச்சு பொருளாகியுள்ள விமலேஸ்வரி என்பவர் 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியில் வன்னியில் போட்டியிட்ட ஒரு பெண் வேட்பாளரின் வெற்றிக்காக தீவிரமாக பாடுபட்ட ஒருவராவார்.

அத்துடன் குறித்த வேட்பாளரால் உருவாக்கப்பட்ட வடக்கு மக்கள் முன்னணி என்ற கட்சியில் தனிப்பட்ட செயலாளர் நியமனம் வழங்கப்பட்ட 6 பேர்களில் ஒருவராவார். (விமலேஸ்வரி, பாஸ்கரன், விஜி, ரமேஸ், வசந்தன், சாந்தன்)


மேலும் அத் தேர்தலில் படுதோல்வி அடைந்த குறித்த பெண்மணி கிளிநொச்சி சென்று விட்டார், எனினும் 2014 வரை குறித்த பெண்ணின் தனிப்பட்ட செயலாளராகவே கடமை புரிந்துள்ளார்.

அத்துடன் இளைஞர் சேவைகள் மன்ற பிரதிப் பணிப்பாளராக கடமை புரிந்த காலத்திலேயே (2013) அவரால் வவுனியா பூட் சிற்றிக்கு எதிரில் பாரிய கடைத் தொகுதி அமைக்கப்பட்டது. அதற்கான நிதியை எவ்வாறு பெற்றுக் கொண்டார் என்பதும் தெரியாத புதிரே.


இதேவேளை சாதாரண அதிபரான குறித்த வேட்பாளரிடம் கிளிநொச்சியில் ஒரு சர்வதேச பாடசாலை, கிளிநொச்சி பன்சலவிற்கு எதிரே கடைத் தொகுதியுடன் கூடிய பல ஏக்கர் காணி, வவுனியாவில் சர்வதேச பாடசாலை, வவுனியா வைரவ புளியங்குளம் பகுதியில் மாடி வீடு, கொழும்பு மகரகமவில் வீடு, வாகனங்கள் மட்டுமன்றி தமது பிள்ளைகளையும் ரஸ்யா அனுப்பி பல கோடியில் வைத்தியராக்கி அழகு பார்த்தார்.

இவைகள் அனைத்தும் பெற்றோர் அற்று HOME இல் வளர்ந்த ஒரு பெண் பெற முடியும் என்றால் அவரின் செயலாளரால்?


ஆக நல்லாட்சி அரசின் காலத்தில் தனது மோசடிகளையும் தனது லேபிலையும் மறைக்க கூட்டமைப்புக்குள் புகுந்த விமலேஸ்வரி எடுத்த ஆயுதமே தமிழரசுக் கட்சியின் மகளீரணித் தலைவி பதவி என்பதாகும்.

இதேவேளை நாமலுடன் உள்ள படத்தை வைத்து இவர் அரசின் ஏவலாளி என்பதை ஏற்க முடியாது என்பதுடன் அவர் குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் சேவைகள் மற்ற பிரதிப் பணிப்பாளராகவே கலந்து கொண்டுள்ளார்.

இதேவேளை குறித்த மகளீரணித் தலைவி கூறும் விடயத்திலும் பல உண்மைகள் மறைந்துள்ளன.

அந்த வகையில் கனடாவில் இருந்து வடகிழக்கு தமிழருக்காக அனுப்பப்பட்ட பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளன என்பது உண்மையே. எனினும் அதில் சுமந்திரன் தொடர்பு பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை.


அதற்கான வீடியோ ஆதாரங்கள் தமிழ் பொறிக்குக் கிடைத்துள்ளன. இதோ அவை மக்களின் பார்வைக்கு;

எனவே தமிழ் மக்கள் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் மாற்றத்தை நோக்கி வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.