முன்னாள் முதல்வர் விக்கிக்கு ஆதரவு; புதுக்குடியிருப்பு மாற்றத்துக்கான இளையோர்..!

0

புதுக்குடியிருப்பு மாற்றத்துக்கான இளையோர் அணியினர் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்

புதுக்குடியிருப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.


கடந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட புதுக்குடியிருப்பு மாற்றத்துக்கான இளையோர் அணி கூட்டமைப்புக்கு சவால் விடுத்து 4 ஆசனங்களை பெற்றுக் கொண்டனர்


இந்த நிலையில் யாருக்கு தமது ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடி இன்று வன்னி மாவட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுடன் இணைந்து புதுக்குடியிருப்பில் ஊடகங்களை சந்தித்து தமது நிலைப்பாடுகளை தெரிவித்தனர்.