யாழில் ஈ.பி.டி.பி வேட்பாளரின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் 10 இளைஞர்கள் கைது..!

0

ஈபிடிபியின் பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ரெமிடியஸ் நடத்திய தேர்தல் கலந்துரையாடலில் கலந்து கொண்ட10 இளைஞர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இன்று மாலை இளைஞர்களை அழைத்து குறித்த வேட்பாளர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.இதன் போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் கலந்துரையாடலில் கலந்துகொண்ட 10 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.


பொலிசார் இளைஞர்களை கைது செய்ததை அடுத்து சம்பவ இடத்திலிருந்து வேட்பாளர் நாசுக்காக விலகிச் சென்றுள்ளார்.


சுகாதார முறைகளை பின்பற்றாததாலேயே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்தன.