வவுனியாவில் சாள்ஸ் மற்றும் சிவமோகனை புறக்கணித்து தமிழரசுக் கட்சியின் தேர்தல் கூட்டம்..!

0

வவுனியாவில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கான கூட்டம் ஒன்று நடைபெறவிருந்த நிலையில், கூட்டம் நடைபெறாது என வேட்பாளர்களுக்கு தெரியப்படுத்திய பின்னர் தனது ஆ தரவாளர்களுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கூட்டம் நடாத்தியுள்ளார்.

குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜாவும் பிரசன்னமாகியிருந்தனர்.


குறித்த சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொள்வதை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்திருந்தார்.

இதனையடுத்து கூட்டம் நடைபெறாது என அனைத்து வேட்பாளர்களுக்கும் தெரியப்படுத்தி விட்டு, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையினரை அழைத்து கூட்டத்தை கூட்டியுள்ளார்.


ஏனைய தமிழரசுக் கட்சி வேட்பாளர்களான சாஆள்ஸ் மற்றும் சிவமோகனை புறக்கணித்து வவுனியா கிளையை அழைத்து கூட்டத்தை கூட்டியமை வடமாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்கள் தனித்து தேர்தல் பி ரச்சார நடவடிக்கையில் ஈடுபட முனைப்பு காட்டுவதையும், சக கூட்டமைப்பு வேட்பாளர்களை ஓரங்கட்ட முனைவதிலும் இருந்து தமிழரசுக் கட்சிக்குள் குத்து வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றது.


இதேவேளை, குறித்த கலந்துரையாடலுக்கு தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.