யாழில் மர்மப் பார்சல் வெடிப்பு; இராணுவ அதிகாரிக்கு நேர்ந்த சோகம்..!

0

யாழில் நேற்று இடம் பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவு, வல்லைவெளிப் பகுதியில் இடம் பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இராணுவ அதிகாரி இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று மாலை 6.30 மணியளவில் இடம் பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“வல்லைவெளி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் இன்று மாலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.


இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் விழுத்திவிட்டுச் சென்ற பொதியை அவதானித்த இராணுவ அதிகாரி, பொதியை பிரிக்க முற்பட்டபோது அது வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தேர்தல் காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புவதற்காக மேற்கொள்ளும் சதி முயற்சி என மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.