சுமந்திரனின் கருத்தால் தமிழரசுக் கட்சிக்குள் வெடித்தது புதிய சர்ச்சை..!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையில் முன்னாள் போராளிகளை இணைத்துக் கொள்வது தொடர்பாக கூறியுள்ள பொய் தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளையினரை அவமானப்படுத்தும் செயல் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.


இன்று யாழில் சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் போராளிகளை பொறுத்த வரையில் அவர்கள் தமிழ் மக்களுக்காக போராடியவர்களே; தமக்காக போராடியவர்கள் இல்லை.


உண்மையிலே முன்னாள் போராளிகளை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை மட்டுமே இணைத்துள்ளது.

நானும் பல வழக்குகளில் ஈடுபட்டு முன்னாள் போராளிகள் பலரை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையில் இணைத்துள்ளேன்.


இந்நிலையில் சுமந்திரன் தான் மட்டுமே போராளிகளை தமிழரசுக் கட்சியில் இணைப்பதற்காக போராடியதாக கூறியுள்ளார்.

இது 10 வருடங்களாக கொழும்பில் இயங்கி வரும் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்தினரை அவமானப்படுத்தும் செயலாகும் என்று கூறியுள்ளார்.