சமய ஸ்தலங்கள், தனியார் வகுப்புகளை மீண்டும் திறக்க அனுமதி – அரச தகவல் திணைக்களம்

0

சமய ஆராதனைகளுக்காக ஒன்றுகூடுவதற்காக எதிர்வரும் 12 ஆம்திகதி முதல் சமய ஸ்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இவ்வாறு சமய ஸ்தலங்களில் அதிகபட்சமாக 50 ப‍ேரே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவ்வாறே எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புகளை (டியூஷன்) நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.


அதேவேளை, வகுப்பில் அதிக பட்சமாக 100 மாணவர்களை மாத்திரமே கொண்டு தனியார் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.