வவுனியாவில் புதையல் தோண்டிய வைத்தியரின் மனைவி உட்பட மூவர் கைது..!

0

வவுனியா நத்திமித்திரகமவில் உள்ள கிப்புல்கல மலையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவரது மனைவி உட்பட மூவர் இன்று (09) மாலை பொஹஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.


கிப்புல்கல மலைப் பகுதியில் புதையல் தோண்டுவதாக பொஹஸ்வெவ பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் மூவரைக் கைது செய்தனர்.


இவர்களிடமிருந்து பூஜைப் பொருட்கள், பித்தளை மோதிரங்கள் , புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தும் உபகரணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியா நந்திமித்ரகமவை சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.