கொரோனா சூழ்நிலையால் மூடப்பட்ட அரச பாடசாலைகள் இம்மாதம் ஜூன் ஆரம்பம்..!

0

கொரோனா சூழ்நிலையால் மூடப்பட்ட அரச பாடசாலைகள் இம்மாதம் ஜூன் 29 ஆம் திகதியுடன் ஆரம்பம்.

நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படும்.


முதற்கட்டம் -ஜூன் 29 முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை ( அதிபர் ,ஆசிரியர்மார் மற்றும் நிர்வாக ஊழியர்கள் வருகை )

இரண்டாம் கட்டம் – ஜூலை 6 முதல் ஜூலை 17 வரை (வகுப்புகள் 5,11 மற்றும் 13 வரை)


மூன்றாம் கட்டம் – ஜூலை 20 (10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் )

நான்காம் கட்டம் – ஜூலை 27 ( 3,4,6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகள் )

முதலாம் ,இரண்டாம் வகுப்புகள் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும்.


செப்ரெம்பர் 13 இல் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடக்கும்.

உயர்தரப் பரீட்சைகளை செப்ரெம்பர் 07ம் திகதி ஆரம்பித்து ஒக்டோபர் 02ம் திகதி முடிவுறுத்த தீர்மானம்


கல்வியமைச்சர் டலஸ் சற்று முன்னர் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அறிவிப்பு