நிதி மோசடி குற்றச்சாட்டு; ஆறுமுகம் தொண்டமானின் மருமகன் விரைவில் கைது?

0

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மகளின் கணவர் (தர்ஷன்) மேற்கொண்ட பெரிய அளவிலான மோசடி தொடர்பாக ஊழல் எதிர்ப்பு தேசிய கூட்டணியினால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மகளின் கணவர் தர்ஷன் (இந்திய பிரஜை) Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடமிருந்து ரூ .10 மில்லியன் கமிஷனைப் பெற்றதாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஆறுமுகம் தொன்டமானின் அமைச்சில் தர்ஷன் உயர் பதவியில் இருந்தார். அவர்தான் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடர்பானவற்றுக்கு பொறுப்பாக செயற்பட்டதுடன் ​​அனைத்து கட்டுமான மற்றும் திட்டங்களுக்கும் அவர் 10% கமிஷனைப் பெற்றார் என்பது நாங்கள் விசாரித்தபோது தெரியவந்தது.

மீள்குடியேற்ற அமைச்சினால் செயற்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டம் மீள்குடியேற்ற அமைச்சினால் Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பதற்கு தர்ஷன் கமிஷன் பெற்றதாக தற்பொழுது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .


1000 வீடுகள் தர்ஷனின் கமிஷன் 10 கோடி. பணத்தில் ஒரு பகுதி முன்கூட்டியே செலுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சகத்துடன் இந்த திட்டத்தை ஒருங்கிணைத்த விஜயலட்சுமி கேதீஸ்வரம் இதற்கு உடன்படாததால் அவரை தர்ஷன் மற்றும் தொன்டமானின் செயலாளர் முகம்மதினால் அச்சுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சிஐடியிடம் தர்ஷன் தொடர்பாக இரண்டு முறைாபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய பிரஜையான தர்ஷன் அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாகவும் மற்றும் Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடம் கமிஷன் பெற்ற மோசடி தொடர்பாக தர்ஷன் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட உள்ளதாக சி.ஐ.டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பெரிய அளவிலான மோசடி தொடர்பாக எதிர்காலத்தில் ஜனாதிபதி சிறப்பு புலனாய்வு ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளதாக ஊழல் தடுப்பு தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் மேலும் தெரிவித்தார்.