கஜேந்திரகுமாரின் தேர்தலுக்காக தலைவரை பலியிடத் தயாராகும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு..!

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் பணம் பெற்று டீல் செய்தார் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் காண்டீபன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கும் வேளையில், தலைவரால் உருவாக்கியவர்கள் நாம் என்று பெருமை பேசும் புலம்பெயர் அமைப்பொன்று மௌனம் காப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய முற்பட்டவேளை, பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் எமக்கு கிடைத்தன. அவற்றை இங்கே தருகின்றோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பு நிலையில் இருக்கும் ஒரு சிலர் கஜேந்திரகுமாரின் விசுவாசியாகிதே, நிலைமை இன்று தலைவர் பிரபாகரனையும் மாவீரர்களையும் கைவிட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவானது கஜேந்திரகுமார் கட்சியின் கிளைக் கழகமாக மாறியதற்கான காரணம் என்கிறார்கள்.


மாவீரர் தினத்தை மாற்றுகிறேன் என்று கஜேந்திரகுமார் அறிவித்த போது மௌனம் காத்த மேற்படி அமைப்பு, விடுதலைப் போராட்டத்தில் இணைந்த பெரும்பாலான சிறுவர்கள் வறுமையிலும் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் வயதைக் கூட்டி வலுக் கட்டாயமாக இணைத்தார்கள் என்று சொன்னபோதும் மௌனம் காத்தார்கள்.

இதற்காக கஜேந்திரகுமார் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் பலர் வற்புறுத்திய போதும் அதைக் கேட்க மறுத்த பொறுப்பு மட்டத்தில் உள்ள சிலர் அவருக்கு செங்கம்பளம் அளித்து விருந்தளித்தனர். கஜேந்திரகுமார் புனிதர் என்று நற்சான்றிதழ் அளித்தனர்.


அதன் உச்சமாக இன்று தலைவர் பிரபாகரன் அவர்களை கீழ்த்தரமாக சித்தரிக்க முயலும் காண்டீபன் விடயத்திலும் மௌனம் காக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக எதிர்ப்புத் தெரிவிக்க முயன்றவர்களுக்கு வாய்ப்பூட்டுப் போடுகிறார்கள்.

இந்த நேரமும் ஏன் மௌனம் என்று கேட்ட போது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் ஒருவர் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அந்தப் பதிலில், காண்டீபனின் கருத்து ஏற்க முடியாதுதான் ஆனால் இந்த நேரம் பகிரங்கமாக எதிர்ப்பைத் தெரிவித்தால் அவர்களுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

தலைவரின் பெயரைச் சொல்லி அமைப்பு நடாத்துபவர்கள் இன்று கஜேந்திரகுமாரின் தேர்தல் வெற்றிக்காக தலைவர் பிரபாகரனைப் பலியிடத் தயாராகி விட்டார்கள் என்பதே கசப்பான உண்மை.


Tamil Leader