சட்டத்தரணி கனக ஈஸ்வரன் முன்நிலையாகாத எந்த வழக்கும் சுமந்திரன் வென்றதில்லை..!

0

“நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் முடிவு எப்படி அமைந்தாலும் ஜனநாயகத்தை நிலைநாட்டு வதற்கான போராட்டம் தொடரும்” இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


நேற்றுப் பிற்பகல் தேர்தல் தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் தனது முடிவை அறிவித்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இந்த வழக்கில் நாம் இரண்டு பிரதான கோரிக்கைகளை முன் வைத்தோம். ஒன்று – ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தும் அறிவிப்பு தவறானது என்பது. அடுத்தது – நாடாளுமன்றம் கலைத்து மூன்று மாதங்களாகியும் புதிய நாடாளுமன்றம் கூட முடியாத காரணத்தினால் நாடாளுமன்றக் கலைப்புப் பிரகடனம் செல்லுபடியற்றது என்பது.

முதலாவது விடயத்துக்கு வழக்கு விசாரணை ஆரம்பித்து முதல் நாளிலேயே முடிவு எட்டி விட்டது. ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது.


இரண்டாவது விடயம் தொடர்பில் வழக்கைத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத வகையில் நீதிமன்றம் முடிவு செய்து அறிவித்துள்ளது.

எனினும் ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடரும் என்றார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் தனது முகநூலில்,

”தமிழ் தேசிய கூட்டமைப்பின் ( இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ) தற்போதைய வரலாற்றில் “சட்ட மேதை” ஜனாதிபதி சட்டதரனி கனக ஈஸ்வரன் முன்நிலையாகாத எந்த வழக்கும் வென்றதில்லை. இதற்கு உதாரணம் இன்றைய வழக்கு தீர்ப்பு.”ஜனாதிபதி சட்டத்தரணி (சட்ட மேதை ) கனக ஈஸ்வரன் முன்நிலையாகாத எந்த முக்கிய வழக்கும் சுமந்திரன் வென்றது இல்லை.
MA சுமந்திரன் OUT”

எனத் தெரிவித்திருந்தார்.கூட்டமைப்பின் நான்கரை வருட கள்ள மெளனம் கலைக்கப்பட்டுள்ளாதால் தாம் என்ன விடயத்தை மக்கள் முன் வைக்கவுள்ள குழப்பத்தில் சக கட்சி உறுப்பினர்களை விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.