வவுனியா கனகராயன் குளம் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு..!

0

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் 14 மோட்டார் குண்டுகள் விசேட அதிரடிப் படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

கனகராயன்குளம் பகுதியில் உள்ள குறிப்பிட்ட குளத்தை புனரமைப்பு செய்வதற்கான வேலைகள் இடம் பெற்று வருகின்றன.


இதன் போது வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டுகள் காணப்படுவதை அவதானித்திருந்த பணியாளர்கள் கனகராயன்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசேட அதிரடிப் படையினரை வரவழைத்து சோதனை செய்த போது புதையுண்டு இருந்த 14 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.


அவற்றை மீட்ட அதிரடிப் படையினர் அவ்விடத்தில் மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் நீதிமன்ற அனுமதி பெற்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.