Breaking news உயர்நீதிமன்றம் தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு..!

0

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்று ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அவற்றை விசாரணைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி செய்தது.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ,தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி ஆகியவற்றை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் கடந்த 10 நாட்கள் பரிசீலனைகள் இடம்பெற்றன.

இதனையடுத்து, குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (01) மாலை நிறைவடைந்த நிலையில் இந்த தீர்மானம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி தேர்தல் நடவடிக்கைகளை அரசும் தேர்தல் ஆணைக்குழுவும் முன்னெடுக்கலாம் . நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக இந்த தீர்மானத்தை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.