வினாத்தாள் செய்யவில்லை என ஆசிரியர் ஏசியதால் சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை..!

0

ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என ஏசியதாகவும் அதனால் வாழ விருப்பமில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட15 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.


வெல்லாவெளி காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாக்கியராஜா மேனகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் தனது படுக்கையறைக்கு சென்ற சிறுமி கூரையில் சல்வார் துணியை இட்டு தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கண்ட தாயார் சிறுமியை துக்கில் இருந்து கழற்றி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் இடையில் உயிரிழந்துள்ளார்.


பாடசாலை ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என ஏசியதாகவும் அதனால் தனக்கு வாழ விருப்பமில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டே குறித்த சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது


குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.