2010 இல் சராவுக்கு சீற்கொடுத்தமை தவறு; 2011ல் வந்த ஒட்டுக் குழு சித்தர் காட்டம்..!

0

2010 இலேயே கூட்டமைப்பு சரவணபவனுக்கு தேர்தலலில் இடமளித்திருக்கக் கூடாது. அவரது நிதி நிறுவனம் பற்றிய சிக்கல் பூதாகரமாக இருந்த போது நீங்கள் வேட்பாளர் இடம் கொடுத்ததே முதல் தப்பு என புளொட் தலைவர் சித்தார்த்தன் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அதன் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து சுமந்திரனின் சிங்கள செவ்வி தொடர்பில் உரையாடினர்.

அப்போது சரவணபவன் செய்த நாதாரித் தனம் முழுவதையும் சுமந்திரன் சம்பந்தர் முன் புட்டுப் புட்டு வைத்தார்.


சுமந்திரன் மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக சரவணபவன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுமந்திரனுக்கு எதிரான அறிக்கைகளைப் பெற்று இரண்டு பக்கங்கள் ஒதுக்கி நான்கு வர்ணத்தில் தன்மூக்கைத் தானே தோண்டி நாவால் சுவைத்தார்.

பெயருக்காகவும் விளம்பரத்துக்காகவும் ஏங்கித் தவித்த கிழடுகள் விழுந்தடித்து பேட்டி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


இதன் போது கருத்துத் தெரிவித்த – அரச ஒட்டுக் குழுவாக இருந்துவிட்டு 2011 ஆம் ஆண்டு கூட்டமைப்புக்குள் வந்த சித்தார்த்தன், தான் வருவதற்கு முதல் வருடம் சரவணபவனுக்கு சீற் கொடுத்தது தப்பு என்று காட்டத்துடன் சம்பந்தரிடம் தெரிவித்திருக்கிறார்.

அதாவது தேர்தல் திருவிழாவில் தேசியம் என்னும் மாயைப் போர்வையில் கதிரைகளுக்கு அடிபடும் கூட்டமைப்பின் அலங்கோலங்கள் இன்னும் தொடரும் என்பதே உண்மை.


(மேற் குறித்த ஆக்கமானது தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர் ஜீவன் ஜெயா என்பவரால் எழுதப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.)