வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் மீட்பு..!

0

வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரவு குறித்த இளைஞரை நீண்ட நேரம் காணாத நிலையில் அவரது பெற்றோர் தேடியுள்ளனர்.‌


இதன் போது வீட்டின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இருப்பதை அவதானித்துள்ளனர்.

உடனடியாக அவரை மீட்டு வவுனியா வைத்திய சாலையில் அனுமதித்த போதும் முன்னரே அவர் இறந்து விட்டதாக வைத்திய சாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவத்தில் கருவேப்பங்குளம் பகுதியை சேர்ந்த சீவரத்தினம் நிலான் (வயது 18) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.