வவுனியாவில் கத்திக் குத்து சம்பவம்; இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயம்..!

0

வவுனியாவில் இன்று மாலை இருவேறு இடங்களில் இடம் பெற்ற கத்திக் குத்துச் சம்பவங்களில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காதல் விவகாரம் காரணமாக கற்பகபுரம் பகுதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் படுகாமடைந்துள்ளனர்.


அத்தோடு அலகல்லு பகுதியில் இடம் பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவங்கள் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.