யாழில் பொலிஸார் மீது கிளைமோர் தாக்குதல்; பொலிசார் காயம்..!

0

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடதப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியில் இடம் பெற்றது.


சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மணல் கடத்தல்காரர்களால் பொலிஸாரை இலக்கு வைத்து இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அத்துடன் சம்பவம் இடம் பெற்ற இடத்தில் போல்ஸ்கள், வயறுகள் காணப்படுகின்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.