மத்திய வங்கியால் திடீரென சீல் வைக்கப்பட்ட நிதி நிறுவனத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்..!

0

நீர்கொழும்பில் அமைந்துள்ள தி பினானஸ் நிறுவனத்திற்கு முன்பாக வாடிக்கையாளர்களான நிதி வைப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீலங்காவிலுள்ள த பினான்ஸ் கம்பனி நிறுவனங்கள் பல கடந்த 22 அம் திகதி மத்திய வங்கியினால் சீல் வைத்து மூடப்பட்டன.


குறித்த நிதி நிறுவனம் நஸ்டத்தை எதிர்நோக்கியதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தின் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த 10 வருட காலமாக மத்திய வங்கியினால் த பினான்ஸ் கம்பனி நிதி நிறுவனம் நிர்வகிக்கப்படுவதாகவும் மத்திய வங்கியினால் முன்னறிவித்தலின்றி கடந்த 22 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து கிளைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தமது நிதி வைப்புகளுக்கு சில மாத காலமாக வட்டி வழங்கப்படவில்லை எனவும் வைப்பாளர்களின் நிதியை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.