வவுனியாவின் பிரபல பாடசாலையின் விடுதியில் திருட்டு; கண்டு கொள்ளாத பாடசாலை நிர்வாகம்..!

0

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலத்தில் கல்வி கற்பிக்கும் வெளி மாவட்ட ஆசிரியர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள covid 19 தொற்று பரவுதல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டமையால் வீடு சென்ற நிலையில் பாடசாலை விடுதியில் திருடர்கள் கூரை ஓட்டை அகற்றி சீலிங் சீற்றை உடைத்து விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியதுடன் மடிக் கணணி உட்பட மேலும் பல பொருட்களினையும் எடுத்து சென்றுள்ளனர்.


செட்டிகுளம் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்,

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலத்தில் கல்வி கற்பிக்கும் வெளி மாவட்ட ஆசிரியர்கள் நாட்டில் பரவும் covid 19 Corona தொற்று பரவுதல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு வீடு சென்ற நிலையில் விடுதியில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.


இவ்வாறு நடைபெற்றதற்கு காரணம் கூற வேண்டியவர்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களும் விலகி நிற்பதும் ஏற்க முடியவில்லை.

அரசாங்கத்தின் கட்டிடத்திற்கே பாதுகாப்பு இல்லாத போது ஆசிரியர்களின் நிலை என்ன??

குறித்த பிரதேச மக்களின் அறிவு வளர்ச்சிக்காக கல்விச் சேவை செய்யும் நோக்கில் உள்ள ஆசிரியர்களின் மனநிலை???

இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் எங்களை பாடசாலையிலிருந்து விலகிச் செல்ல தூண்டுகிறது.


மீண்டும் பாடசாலை ஆரம்பித்ததும் நாங்கள் இடமாற்றம் கேட்டு உயர்அதிகாரிகள் வரை செல்வதை தவிர வேறு எவ்வழியும் அறியோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பாடசாலையில் இரவு நேரக் காவலாளி ஒருவர் நீண்டகாலமாக கடமையாற்றி வருகின்றார், இந் நிலையிலேயே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இத்தகய திருட்டுச் சம்பவம் போன்ற பல சம்பவங்கள் வவுனியாவின் பல பாடசாலைகளில் இடம்பெற்றுள்ள போதும் அதிபர்களும், பாடசாலை நிர்வாகங்களும் மறைக்கும் நிலையே காணப்படுகின்றது.


இத்தகய நிலையில் தமது உடமைகளை பாடசாலை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டால் பறிகொடுத்த ஆசிரியர்களுக்கு குறித்த பாடசாலைக்கோ, அல்லது குறித்த பிரதேசத்திற்கோ விசுவாசமாக சேவையாற்றும் எண்ணம் வருமா?

என்பதை உணர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடன் நீதியை பெற்றுக் கொடுக்க வழிவகை செய்யுமாறு அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.