மட்டக்களப்பில் சிறுமி துஷ்பிரயோகம்; 14 வயது காதலன் கைது..!

0

மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று ஞாயிற்றுக் கிழமை கைது செய்துள்ளதாகவும் சிறுமியை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த பிரதேசத்திலுள்ள மருமகள் முறையிலான சிறுமியை அதே பிரதேசத்தைச் சோந்த 14 சிறுவன் காதலித்து வந்துள்ளதாகவும், சம்பவதினமான சனிக் கிழமை பகல் 12 மணியளவில் கிரான்வேம்பு பகுதியிலுள்ள சிறுவனின் சகோதரனின் வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று அங்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதனையடுத்து, குறித்த சிறுமி உறவினரிடம் சம்பவத்தை தெரிவித்ததை அடுத்து காவல் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை முறைப்பாடு செய்துள்ள நிலையில், குறித்த சிறுவனை பொலிஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை பெற்றோரின் பொறுப்பற்ற ஆடம்பர செயலாலும் ஆசிரியர்களின் கைகளை சட்டத்தின் மூலம் கட்டியதாலுமே இத்தகய சம்பவங்கள் தமிழர் தாயகத்தில் இடம் பெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.