லண்டன் நாகபூசணி அம்பாள் ஆலய நிதி உதவியில் வெளிச்சம் அறக் கட்டளையின் கிருமி நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு..!

0

லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயம், வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களகத்துடன் இணைந்து இன்னும் ஒரு உன்னத பணிகளில் ஒன்றாக covid19 சுகாதாரத்தை மேம்படுத்தல் பணியின் மூன்றாம் கட்ட பணிகள் இன்றைய தினம் இடம் பெற்றது.

அவ் வகையில் 24.05.2020 வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் உள்ள சிவன் முதியோர் இல்லத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தமிழினியன் திரு.S.S.வாசன் அவர்களின் மேற்பார்வையில் சிவன் முதியோர் இல்லத்தில் வெளிச்சம் அறக் கட்டளையின் மூலம் கொரோனா கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.