யாழில் போதைப்பொருள் விற்றவர் மீது கொலை வெறித் தாக்குதல்..!

0

யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் அடி காயங்களுடன் மீட்கப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரை யாழ். சிறைச்சாலையில் 21 நாட்கள் தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

கடந்த புதன்கிழமை சங்கானையில் வயல்வெளி ஒன்றில் காயமடைந்த நிலையில் நபர் ஒருவரை கண்ட மக்கள் பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். அங்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்து விசாரித்தனர்.


அதில் தான் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் பணம் பெறுவதற்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் தன்னை சம்பந்தப்பட்ட நபர்கள் கட்டி வைத்து தாக்கியதாகவும் தான் தப்பி ஓடியே சங்கானை வயல்வெளியை வந்ததடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.


அவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கொழும்பில் இருந்தே வந்தவர் என்றும் தெரிய வருகின்றது.


இந்நிலையில் அவரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவரை சிறைச்சாலையில் 21 நாட்கள் தனிமையில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரிய வருகிறது.