பாராளுமன்ற ஒத்தி வைப்புக்கு எதிரான மனுக்கள் செவ்வாய் வரை ஒத்திவைப்பு..!

0

பாராளுமன்ற ஒத்தி வைப்புக்கெதிரான மனுக்களை ஆராய்வதை வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை வரை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது .

பாராளுமன்ற ஒத்திவைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையின் ஐந்தாம் நாளான இன்று அரச சார்பில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா , ஜனாதிபதி செயலர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆகியோர் ஆஜராகி சமரப்பணங்களை முன் வைத்திருந்தனர்.


பாராளுமன்ற ஒத்தி வைப்புக்கெதிரான மனுக்களை பரிசீலனைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.


பாராளுமன்ற ஒத்தி வைப்புக்கெதிரான மனுக்கள் மீதான விசாரணையின் ஐந்தாம் நாளான இன்று அரச சார்பில் ஆஜராகி முன் வைத்த தனது வாதத்தின் போது சட்டமா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.