தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் CID ,TID பணிப்பாளர்களுக்கு இடமாற்றம்..!

0

குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காவல்துறை திணைக்களத்தின் உள்ளக தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கடமை நிமித்தம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக செற்படும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் விக்ரமாராச்சிகே திலக்கரத்ன மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் ஆகியோருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பான பரிந்துரை தற்சமயம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணை பிரிவின் புதிய பணிப்பாளராக மேல் மாகாண புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக தற்சமயம் செயற்படும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவரது பெயர் அனுமதிக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவுகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபராக செயற்பட்ட நிலந்த ஜயவர்தனவிற்கு இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த பதவிக்கு தற்காலிகமாக வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பத்மசிறி முணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.