தேர்தல் நடத்த முடியும்; டாக்டர் அனில் ஜாசிங்க அதிர்ச்சி அறிவிப்பு..!

0

தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகியிருக்கிற படியினால் அதற்கான சுகாதாரத் துறை பரிந்துரையை வழங்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.


தேர்தல் திகதியைக் குறிப்பது எமது பொறுப்பல்ல. அது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை. அவர்களுக்கு உதவி செய்ய எமக்கு முடியும்.


நாடு தற்சமயம் வழமைக்குத் திரும்புகின்றது. தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை கேட்டால் அதனை வழங்க நாம் தயார் என்று இன்று காலை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் தெரிவித்தார்.


இதேவேளை கொரோனா காரணமாக இதுவரை காலமும் தேர்தல் தொடர்பில் எதிர் நிலைப்பாட்டில் இருந்த பணிப்பாளரின் அமைச்சின் செயலாளராக இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் வெளியாகிய ஊடக சந்திப்பில் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.


அத்துடன் நாட்டில் இதுவரை 1045 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.