மனைவியிடம் ரேட் கேட்ட இளைஞர்களை புரட்டியெடுத்த கணவன்; யாழில் சம்பவம்..!

0

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவரிடம் தொலைபேசி வழியாக முறையற்ற விதமாக பேசிய இரு இளைஞர்கள், பிரதேச மக்களால் நையப் புடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று யாழ் புறநகர்ப் பகுதியொன்றில் நடந்தது.

வட்டுக்கோட்டையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அந்தப் பகுதிக்கு அழைக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்ட பின்னர் பொலிசாரிடம் அவர்கள்ஒப்படைக்கப்பட்டனர்.


சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் அறிமுகமற்ற தொலைபேசி இலக்கமொன்றிற்கு அழைப்பேற்படுத்தி மறுமுனையில் பேசிய இளம் குடும்பப் பெண்ணிடம் “ரேட் என்ன?“ என கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப் பெண் கணவரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த இலக்கத்திற்கு மீள மனைவியை அழைப்பேற்படுத்த வைத்த கணவன், அவர்களை, யாழ் புறநகர்ப் பகுதியொன்றிற்கு வருமாறு குறிப்பிட்டுள்ளார்.


அதன் பின்னர் நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் கார் ஒன்றில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றிருந்த நிலையில் அங்கு ஏற்கனவே, சென்ற பெண்ணின் கணவனும், அந்தப் பகுதி இளைஞர்களும் காத்திருந்தனர்.

இளைஞர்கள் இருவரும் அங்கு வந்ததும் , பெண்ணிற்கு அழைப்பேற்படுத்தி தாம் காத்திருக்கும் விடயத்தை தெரிவித்த போது குறிப்பிட்ட இடமொன்றிற்கு அவர்களை வருமாறு பெண் கூறியதையடுத்து இருவரும் அங்கு சென்றனர்.


அங்கு ஏற்கனவே காத்திருந்த இளைஞர்கள், காரில் வந்த இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து, கட்டி வைத்து நையப்புடைத்ததில் அவர்கள் கடுமையான காயமடைந்தனர்.

பின்னர் இளைஞர்கள் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணை நடத்திய பொலிசார், அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.