லண்டன் நாகபூசணி அம்பாள் ஆலய நிதி உதவியில் வெளிச்சம் அறக் கட்டளையால் கிருமி நீக்கும் பணி முன்னெடுப்பு..!

0

என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயம், வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்துடன் இணைந்து உன்னதமான பணிகளில் ஒன்றாக covid19 சுகாதாரத்தை மேம்படுத்தல் பணியின் இரண்டாம் கட்ட பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.


அந்த வகையில் 20.05.2020 வவுனியா பூவரசங்குளம் பிரதேச வைத்திய சாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.M.மதிதரன் அவர்களினதும், வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு.S.S. ஸ்ரீனிவாசன் அவர்களின் மேற்பார்வையில் பூவரசங்குளம் பிரதேச வைத்திய சாலையில் கொரோனா கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


 

இவ் உயரிய பணியினை மேற் கொள்வதற்கு நிதி உதவியினை செய்த லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயத்தின் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள் வழங்கி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.