வெளிச்சம் அறக் கட்டளையால் கிருமி நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு..!

0

வெளிச்சம் அறக்கட்டளையின் ஒரு உன்னதமான பணியாக Covid-19 சுகாதாரத்தை மேம்படுத்தல் பணியினை வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களகத்துடன் இணைந்து இன்றைய தினம் வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி திரு.க. சுவர்ணராஜா அவர்களின் மேற்பார்வையில் மேற்கொண்டிருந்தது.


அந்த வகையில் வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களகத்தில் வெளிச்சம் அறக்கட்டளையின் மூலம் தொற்று நீக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்களமானது தொடர்ச்சியாக மக்களுக்கான பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி வருவதால் தினமும் பலர் குறித்த திணைக்களத்திற்கு வருகின்றமையால், மக்களின் பாதுகாப்புக் கருதி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது


இவ் உயரிய பணியினை மேற்கொள்வதற்கு நிதி உதவியினை லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அடியார்கள் வழங்கி வைத்திருந்தனர்.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொது இடங்களிலும் தொற்று நீக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


மக்களின் உயிர் வாழ்க்கைக்கு சவாலாக மாறியுள்ள கொரோனாவை முற்றாக ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வெளிச்சம் அறக்கட்டளையினருக்கும், உதவிகளை வழங்கிய லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய பரிபாலன சபையினருக்கும் மேலும் பணி தொடர எமது வாழ்த்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.