சமரசிங்கவை கட்சியில் இருந்து நீக்கிய மைத்ரி; மகிந்தவையும் கட்சியில் இருந்து நீக்குவாரா ..!

0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக களுத்துறை மாவட்டத்தில் 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட சமரசிங்க வேட்பு மனுக்களை சமர்ப்பித்ததை அடுத்து இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


இதேவேளை சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்டத் தலைவர் பதவியில் இருந்தும் மஹிந்த சமரசிங்க இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.


இதனையடுத்து களுத்துறைக்கான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்டத் தலைவராக சுனித் லால் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை தற்போதய பிரதமர் மகிந்த, நாமல் உள்ளிட்டோரின் சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை நீக்க மைத்ரி முன் வருவாரா என்பதே எமக்கு முன்னுள்ள வினா.