வடக்கு மாகாணத்திற்குள் போக்குவரத்து தளர்வு; கொரோனா நோயாளர்கள் 992 ஆக அதிகரிப்பு..!

0

வடக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொது மக்கள் பேருந்துகளில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


எனினும் வேறு மாகாணங்களில் இருந்து வட மாகாணத்திற்கு நுழைவதற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து இறுக்கமாக கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றது.


கொரோனா பரவல் காரணமாக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று (18) முதல் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.


இதுவரை காலமும் தினமும் அரச, தனியார் ஊழியர்கள் மற்றும் பாஸ் உள்ளோர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை இதுவரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை 992 ஆக உயர்ந்துள்ளதுடன், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 559 ஆகவும் பலியானோர் 9 ஆகவும் காணப்படுகிறது.