ஶ்ரீலங்காவின் ஐந்து இணைய தளங்களை முடக்கிய தமிழீழ சைபர் படையணி..!

0

இலங்கையின் ஐந்து இணைய தளங்கள் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளன.

தமிழீழ சைபர் படையணி என்ற பெயரைக் குறிப்பிட்டு இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட இணைய தளங்களில் பிரதான செய்தி நிறுவனம் , சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவையும் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்து நினைவு கூரல்கள் நடந்து வரும் இன்றைய நாளில் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த இணையத்தளங்களை மீள இயங்க வைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.