மே 18 முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்குச் சென்ற விக்கியை திருப்பி அனுப்பிய இராணுவம்..!

0

இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இராணுவத்தால் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.


முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அங்கு பயணமாகியுள்ளார்.


அதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று காலை முல்லைத்தீவு செல்வதற்காக யாழ்.மன்னார் வீதியூடாக பயணித்த போது , சங்குப்பிட்டி கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழி மறிக்கப்பட்டார்


சங்குப்பிட்டி, கேரதீவில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் வைத்து மறிக்கப்பட்ட அவர் சுமார் ஒரு மணி நேரமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர் முள்ளிவாய்க்கால் செல்லதற்கு அனுமதி மறுக்கப் பட்டு மீண்டும் திருப்பி அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முதலமைச்சராக கடமை வகித்த காலத்திலேயே முதன் முதலாக தடைகளை மீறி பகிரங்கமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.