சர்வதேச சந்தையில் விலை குறைந்த போதும் நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிப்பு..!

0

லங்கா ஐ ஓ சி நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. புதிய விலை 142 ரூபாவாகும்.


ஏனைய எரிபொருள்கள் விலைகள் மாற்றமில்லையெனவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதேவேளை உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணை ஜனவரி, பெப்ரவரியில் 65 டொலருக்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்ட போதும் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக 25 – 32 டொலருக்கே விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் இவ் அதிகரிப்பு இடம் பெற்றுள்ளது.