கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்புற்றுள்ள நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் ஒருநாள் சம்பளத்தை வழங்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கை முப்படையினர் – பொலிஸ் – சிவில் பாதுகாப்பு படையினருக்கு உரித்தாகாதென பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை ஏனைய அரச திணைக்களங்களின் ஊடாக சேர்க்கப்படும் பணம் கொவிட் நிதியத்தில் வரவு வைக்கப்படுகின்ற போதும் இதுவரை அந்நிதியில் இருந்து மனிதாபிமானப் பணிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சில அரச திணைக்களங்களில் ஊழியர்களின் அனுமதி பெறாது ஒருநாள் சம்பளத்தை கழிக்கும் நடவடிக்கைகளும், மறைமுக அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் குறித்த ஒருநாள் சம்பளத்தை ஊழியர் விரும்பினால் வழங்கலாம் எனினும் அது கட்டாயம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.