இந்த ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 4 பாடங்களில் கணிப்பொறி (கல்குலேட்டர்) பயன்படுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.
அதன்படி, கணக்கியல், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் பொறிமுறை தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு கணிப்பொறி அனுமதிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கம் இதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.