கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த 11 பேர் சுய தனிமைப்படுத்தலில்..!

0

வவுனியா கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த 11 பேர் அவர்களது வீடுகளில் இன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தொழில் வாய்ப்பு மற்றும் வேறு தேவைகளின் பொருட்டு கொழும்பு சென்று கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு சட்ட நடைமுறை காரணமாக வவுனியாவிற்கு வர முடியாத நிலையில் இருந்த 11 பேர் கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் பொலிஸாரால் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.


குறித்த 11 பேரையும் பார்வையிட்ட சுகாதாரா பரிசோதகர்கள் பாதுகாப்பு கருதி அவர்களை 14 நாட்கள் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


அதற்கமைவாக குறித்த அனைவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 957 இலிருந்து 960 ஆக உயர்ந்தது .


இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 520 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 9 ஆகவும் காணப்படுகின்றது.