வவுனியாவில் 570 லீற்றர் கோடா மற்றும் கசிப்புடன் இருவர் கைது..!

0

வவுனியாவில் வவுனியாவில் 570 லீற்றர் கோடாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வன்னிப் பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த அவர்களின் ஆலோசனையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாலடி சில்வா அவர்களின் வழிகாட்டலில், வன்னி பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெகத் மல்வ ஆராய்ச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் வவுனியா, தவசிகுளம் பகுதியில் இன்று (16.05) அதிகாலை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டன.


தவசிகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 2.5 லீற்றர் கசிப்பு, 380 லீற்றர் கோடா, இரண்டு பெரல்கள் என்பன மீட்கப்பட்டதுடன், இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அப்பகுதியில் உள்ள பிறிதொரு வீட்டில் இருந்து 2.5 லீற்றர் கசிப்பு, 190லீற்றர் கோடா, ஒரு பெரல் என்பன மீட்கப்பட்டதுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இருவரிடம் இருந்தும் 5 லீற்றர் கசிப்பு மற்றும் 570 லீற்றர் கோடா, 3 பெரல்கள் என்பன மீட்கப்பட்டதுடன் நீதிமன்றில் சான்றுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 53 வயது மற்றும் 46 வயது நபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.