ஹக்கீம், ரிஷாத் போன்றோர் அரசியல் இலாபம் தேட முஸ்லிம் சமூகத்தை தூண்டிவிடுகிறனர்..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடல்களை மாத்திரம் தகனம் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல.

தகனம் செய்யப்பட்ட உடல்களை கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முஸ்லிம் சமூகத்தினரை தூண்டி விடுகிறார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.


பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (15) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அடிப்படைவாதச் சம்பவங்களுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்பு கொண்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல விடயங்கள் வெளிப்பட்டுள்ளன.


உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடல்களைத் தகனம் செய்ய வேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவரது உடலை தகனம் செய்ய வேண்டிய தேவை காணப்பட்டது. இதனை அரசியலாக்குவது முற்றிலும் தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.