மாவட்ட செயலகத்தில் அறையை பூட்டி விட்டு யுவதியும், அதிகாரியும் செய்த அலங்கோலம்..!

0

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் பணியில் இருந்த யுவதி ஒருவரை அதிகாரிகள் திடீரென வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் ஒன்று நேற்றைய தினம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.


சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

நேற்று மதியம் மாவட்ட செயலத்தில் உள்ள அலுவலக அறை ஒன்று உட்பக்கமாக தாளிடப்பட்டிருந்ததை அங்கு பணியாற்றிய ஏனைய உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளனர்.

குறித்த அறையினுள் பயிலுனராக செயல்படும் இளம் யுவதி ஒருவர் இருக்கையில் அதிகாரி ஒருவர் அங்கு சென்று அறையின் கதவை அடிக்கடி தாளிடுவதை சக உத்தியோகத்தர்கள் அவதானித்து வந்துள்ளனர்.


இந்தநிலையில் நேற்றைய தினமும் அவ்வாறு இடம் பெற்ற போது உடனடியாக குறித்த விடயத்தினை ஊழியர்கள் மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.


இதனையடுத்து உள்ளக கணக்காய்வு அதிகாரி அந்த அறைக்கு சென்ற போது கதவு உட்பக்கமாக தாளிடப்படிருந்ததை அவதானித்த நிலையில் கதவினை தட்டி திறந்து குறித்த யுவதியை மாவட்ட செயலாளரிடம் அழைத்து சென்றனர்.


அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் குறித்த யுவதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.