கிழக்கில் பதற்றம்; கிணறு வற்றியுள்ளதால் அச்சத்தில் மக்கள்..!

0

களுவாஞ்சிகுடி மற்றும் கல்முனையின் சில இடங்களில் வீடுகளிலுள்ள கிணற்று நீர் வற்றியுள்ளதாக செய்திகள் அறியக் கிடைத்துள்ளது.

இதனால் கரையோரப் பகுதி மக்கள் சற்று பதற்றமடைந்துள்ளதுடன் இவ் விடயம் தொடர்பில் கிழக்கில் கிணறுகள் வற்றுவதால் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் இடம் பெயரத் தேவையில்லை என்றும் இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.


இதேய வேளை மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்ததுடன் தென் கிழக்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம், அடுத்த 12 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழமுக்கமாக மாறக் கூடும் எனவும்


இந்த குறைந்த காற்றாழுத்த தாழமுக்கம் தெற்கு வங்க கடலில் புயலாக மாறலாம் எனவும் அது எதிர்வரும் 17ம் திகதி வடமேற்கு திசை நோக்கியும் அதன் பின்னர் 18 மற்றும் 20ம் திகதிகளில் வடக்கிழக்கு நோக்கி நகர்ந்து வடக்கு வங்க கடல் நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


அதேநேரம் மலைப்பாங்கான இடங்களில் வாழ்வோர் எச்சரிக்கையாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.