யாழில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்..!

0

யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

மந்திகை வைத்திய சாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந் தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் அவரது கையில் கல்லடடிப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.


இதனையடுத்து தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன் போது, இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்து சென்ற நிலையில் இராணுவத்தினர் மறித்தனர்.


எனினும் அதனை மீறி அவர் சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன் சூட்டுக்கு இலக்காகிய இளைஞன் அவசர உதவி அம்புலன்ஸ் சேவையில் மந்திகை வைத்திய சாலைக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் குருதிப் போக்கு உள்ள போதும் இளைஞன் பாதுகாப்பாக உள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


இதேவேளை , கையில் படுகாயமடைந்த படைச் சிப்பாய், மந்திகை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு பலாலி இராணுவ வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.