வவுனியா பொது வைத்திய சாலை வளாகத்திற்குள் கத்தி ஒன்றுடன் நபர் ஒருவர் கைது..!

0

வவுனியா பொது வைத்திய சாலை வளாகத்திற்குள் கத்தி ஒன்றினை வைத்திருந்த குற்றசாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் நேற்று மாலை இரு தரப்பிற்கிடையில் இடம் பெற்ற முரண்பாட்டினால், பெண்கள் இருவரும், ஆண் ஒருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.


இதனையடுத்து அவர்களை பார்வையிடுவதற்காக வைத்திய சாலை வளாகத்தில் அவர்களது உறவினர்கள் சிலர் ஒன்று கூடியிருந்தனர்.


இந்நிலையில் வைத்திய சாலை வளாகத்திற்குள் கத்தியுடன் ஒருவர் நிற்பதாக வைத்திய சாலை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டு வவுனியா குற்றத் தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.


இதன் போது சந்தேக நபர் வைத்திருந்த சிறியளவிலான கத்தியினையும் பொலிசார் மீட்டிருந்தனர்.


மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.